‘மலையாள சூப்பர் ஸ்டார்’ நடிகர் மோகன்லால் மனைவியை பார்த்திருக்கீங்களா?…  அழகிய ஜோடியின் கியூட்டான புகைப்படம்…

By Begam on வைகாசி 12, 2023

Spread the love

மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இதுவரை 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

   

நடிகர் மோகன் லால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமே ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.  தமிழில் இவர் உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் இவர் தற்பொழுது ராம் முதல் பாகம், மலைக்கோட்டை வாலிபன், Barroz: Guardian of D’Gama’s Treasure பல படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

 

நடிகர் மோகன் லால் 1988ல் சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரணவ் மற்றும் விஸ்மயா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் இவருடைய மகன் பிரணவ் தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் மோகன்லால் தனது மனைவி சுசித்ராவுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அழகான ஜோடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…