கல்யாணத்துக்கு முன்னாடி ரூமுக்கு அழைத்து சென்ற நடிகை லட்சுமி.. உண்மையை போட்டு உடைத்த 2-வது கணவர் மோகன் சர்மா..!!

By Priya Ram

Updated on:

நடிகை லட்சுமி நடிகர் மோகன் சர்மாவை கடந்த 1975-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் ஆன 5 வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர். நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் முதல் கணவர் பாஸ்கரனுக்கு பிறந்த மகள் ஆவார். சமீபத்தில் நடிகர் மோகன் ஷர்மா லட்சுமியை பிரிந்த விவகாரம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

   

அவர் கூறியதாவது, நானும் நடிகை லட்சுமியும் சட்டக்காரி படத்தில் தான் முதல் முறை பார்த்துக் கொண்டோம். ஒருமுறை லட்சுமி விளம்பர படப்பிடிப்புக்காக மும்பை வந்துள்ளார். அப்போது மும்பையில் இருந்த என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டும் நீங்கள் உதவ முடியுமா என கேட்டார். அவருக்காக ஒரு கால் டாக்ஸியை பிடித்துக் கொண்டு அங்கு சென்றேன்.

ஒரு கடையில் நாய் வடிவமைப்பில் இருக்கும் ஒரு சென்ட் பாட்டிலை பார்த்தேன். பிறகு அது வேண்டாம் எனக் கூறி வைத்துவிட்டேன். அதனை கவனித்த லட்சுமி எனக்கே தெரியாமல் அதனை வாங்கிக்கொண்டு மறுநாள் என்னிடம் வந்து கொடுத்தார். அவர் இந்த நாய் போல உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பேன். உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என கூறினார். முதலில் நான் ஒன்றும் பேசாமல் வந்து விட்டேன்.

மறுநாள் லட்சுமியை தொடர்பு கொண்டு சினிமா கேரியரில் சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன் திருமணத்தைப் பற்றி இப்போது யோசிக்கவில்லை என கூறிவிட்டேன். உடனே லட்சுமி என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கே என்ன நடக்கப்போகிறது என தெரிந்து கொண்டேன். உடனே நான் பழமை வாய்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். திருமணத்திற்கு முன்பு தொடர்பு வைத்து கொள்ள விரும்பவில்லை என கூறினேன்.

மேலும் அந்த அறையில் இருந்து குங்குமத்தை எடுத்து லட்சுமி நெற்றியில் வைத்து விட்டேன். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்தோம். ஒரு முறை ஐஸ்வர்யா என்னிடம் வந்து நீங்கள் வீட்டில் இல்லாதபோது அம்மா வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறார் என அழுது கொண்டே கூறினார் அதன் பிறகு பல கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். மோகன் சர்மா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram