Connect with us

அடக்கடவுளே.. இப்படி ஒரு ரசிகையா..? விமானத்தில் மைக் மோகன் மிரள விட்ட பெண் ரசிகை.. மனம் திறந்து பேசிய மோகன்..!

CINEMA

அடக்கடவுளே.. இப்படி ஒரு ரசிகையா..? விமானத்தில் மைக் மோகன் மிரள விட்ட பெண் ரசிகை.. மனம் திறந்து பேசிய மோகன்..!

 

விமானத்தில் ஒரு ரசிகையின் செயலைப் பார்த்து தான் ஆச்சரியப்பட்டு போனதாக மோகன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் மோகன். இவரது உண்மையான பெயர் மோகன் ராவ். 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அப்போது ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் மிகப்பெரிய ஹீரோவாக அசத்தியவர். ஒரு ஆண்டுக்கு 10 படங்கள் வரை நடித்து 24 மணி நேரமும் வேலை செய்தவர்.

   

இவருடைய படங்கள் அனைத்துமே 100 நாட்களுக்கு மேல் ஓடியதால் இவரை வெள்ளிவிழா நாயகன் எனவும் அழைத்தார்கள். இவரின் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இவருக்கு வியாதி இருப்பதாக கூட புரளிகளை கிளப்பி விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் தனது குரலாலே சூனியம் வைத்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

இவருக்கும் இவருக்கு டப்பிங் பேசிய பாடகருக்கும் இடையில் ஏற்பட மோதலால் தானே படங்களுக்கு டப்பிங் பேசுவதாக கூறி பேசினார். ஆனால் அவரின் குரலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்ட பழம் என்ற திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த மோகன் தற்போது 14 ஆண்டுகள் கழித்து ஹரா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் youtube சேனலுக்கு மோகன் பேட்டியளித்து வருகின்றார். அதில் நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது:” மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன்.

அப்போது என்னிடம் 40 வயது மிக்க ஒரு ரசிகை தன்னுடன் பேசி வந்தார்கள். அந்த பெண்ணுடன் அவருடைய மகனும் இருந்தார். நடிகர் மோகனுடன் அந்தப் பெண் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தபோது அம்மா அதை எடுத்துக்காட்டுங்கள் என்று கூற உடனே அந்தப் பெண் தனது கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக் காட்டினார். அதில் ஒரு லாக்கெட் இருந்தது. அதை திறந்து காட்டிய போது அதில் தனது புகைப்படம் இருந்தது.

இதை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன் மேலும் அவர் கூறியபோது சார் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் உங்களுடைய லாக்கெட் நான் வைத்திருக்கிறேன். திருமணமாக புதிதில் நான் உங்கள் ரசிகை என் கணவரிடம் கூறினேன். அவரும் சரி இந்த லாக்கெட்டை போட்டுக் கொள் என்று கூறிவிட்டார். நான் சாகும் வரை இதை போட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார்.

இதை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனதாக அவர் அந்த பேட்டியில் பேசியிருந்தார். எந்த ஒரு கணவரும் இன்னொருத்தர் புகைப்படத்தை தாலியில் வைத்துக்கொள்ள சம்மதிக்க மாட்டார். இருந்தும் அவர் சம்மதித்திருக்கின்றார் என்றால் அவருக்கு மிகப்பெரிய மனது. இப்படிப்பட்ட ரசிகர்களால் தான் நான் சினிமாவில் நிலைத்து நிற்கின்றேன்” என மிக நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் மோகன்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top