தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களும் அடித்து பிரபலமானவர்தான் நாகேஷ். எம்ஜிஆர் அரசியலில் நுழைந்த காலகட்டத்தில் நாகேஷ் அவரைப் பற்றி தவறாக பேசியதால் அவரை சந்திக்காமல் விலகி இருந்தார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரை சந்திக்க நாகேஷ் வந்துள்ளார். அங்கு பணியில் இருந்தவர்கள் அவரை அனுமதிக்கவில்லை. இது பற்றி தகவல் தெரிந்ததும் எம்ஜிஆர் பணியாளர்களை கண்டித்து இனி நாகேஷ் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஒரு நாள் நாகேஷ் வந்தபோது பணியாளர்கள் அவருக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து எம்ஜிஆரை சந்தித்த நாகேஷ் தன்னுடைய பழைய தவறுக்காக மனம் வருந்தி எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டார். நான் அதையெல்லாம் எப்போதே மறந்து விட்டேன் விஷயத்தை சொல்லுங்கள் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். ஆ கேஷ் கட்டிய தியேட்டருக்கு கார்ப்பரேஷன் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று கூறியுள்ளார். ஆர்கேஷை அனுப்பிய எம்ஜிஆர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் பள்ளியில் இருந்து தியேட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்று விதி உள்ளது தெரிய வந்தது.

அப்போது எம்ஜிஆர் பள்ளி நிர்வாகத்தை அழைத்து பள்ளி நுழைவு வாயிலை பின்புறத்தில் பயன்படுத்தினால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு வராது தியேட்டரையும் திறக்க முடியும் என்று கூறியுள்ளார். அதன்படி பள்ளி நுழைவாயில் மாற்றப்பட்ட நிலையில் பின்னர் தியேட்டருக்கு அனுமதி கிடைத்து நாகேஷ் தியேட்டர் திறக்கப்பட்டது. எம்ஜிஆர் தான் அந்த தியேட்டரை திறந்து வைத்துள்ளார். என்னதான் ஒருவர் தன்னைப் பற்றி இழிவாக பேசினாலும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சமமாக உதவக்கூடிய நல்லெண்ணம் கொண்டவர்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதற்கு இந்த சம்பவமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
