Connect with us

இளையராஜாவோடு சண்டை போட்டு பிரிவு… அந்த ஒரு பாட்டைக் கேட்டு பேப்பரை வீசியெறிந்த வைரமுத்து… அப்ப சொன்ன அந்த ஒரு வார்த்தை!

CINEMA

இளையராஜாவோடு சண்டை போட்டு பிரிவு… அந்த ஒரு பாட்டைக் கேட்டு பேப்பரை வீசியெறிந்த வைரமுத்து… அப்ப சொன்ன அந்த ஒரு வார்த்தை!

 

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.

1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

   

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

வைரமுத்துவாவது பொது மேடைகளிலோ அல்லது பழைய பாடல்கள் பற்றி பேசும்போதே இளையராஜாவின் பெயரைக் குறிப்பிடுவார். ஆனால் இளையராஜா அவர்கள் பிரிவுக்குப் பிறகு வைரமுத்து பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. இந்நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்து இவர்கள் பிரிவு மற்றும் இளையராஜா மேல் வைரமுத்து வைத்திருந்த மதிப்புப் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

#image_title

அந்த நேர்காணலில் “வைரமுத்து இளையராஜாவை விட்டு பிரிந்த பிறகு பாக்யா பத்திரிக்கையில் ‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” என்று ஒரு தொடர் எழுதினார். அப்போது நான் அவரிடம் உதவியாளராக இருந்தேன். அதில் ஒவ்வொருத்தரைப் பற்றியும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதி வந்த போது இளையராஜா பற்றிய அத்தியாயம் எழுத வேண்டிய நாள் வந்தது.

அப்போது அவர் மொட்டை மாடியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அப்போது எங்கோ தூரத்தில் இளையராஜாவின் பாடலான “உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி” பாடல் ஒலித்தது. அதைக் கேட்டு எமோஷனலான வைரமுத்து, எழுதிக் கொண்டிருந்த பேப்பரை தூக்கியெறிந்து விட்டு “இவன எல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது. எத்தன வருஷம் ஆனாலும் இவன் மட்டும் இங்க இருப்பான்” என சொன்னார்.” என மாரிமுத்து அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

 

Continue Reading
To Top