நடிகர் சங்கத்தின் சார்பாக முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக திரை பிரபலங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ‘நடிகர் சங்கம் விஜயகாந்த் நினைவேந்தல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் உண்மையை துணிச்சலோடு உரைக்க சொல்லும் மன்சூர் அலிகான் பேசியபோது நடிப்பின் இமயமாம் 15 கோடி மக்களின் மனதில் வாழும் தெய்வமாக எப்போதும் கேப்டன் விஜயகாந்த் இருப்பார் என்று புகழாரம் சூட்டி அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் கூறினார்.

திரைத் துறையில் நல்ல மனிதர்களாக சிறந்து விளங்கிய புரட்சிக் கலைஞர் எம்ஜி ஆர்; சிவாஜி கணேசன் ஆகியோர் வரிசையில் இடம் பெற்ற கேப்டன் விஜயகாந்த் கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டு நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார். தற்போது நடிகர் சங்கம் சங்கத்தில் ஏதோ ஒரு கட்டிடம் கட்டுவதில் பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக யாரிடமும் கடன் வாங்காதீர்கள் என்று மன்சூர் கூறினார்.
அதற்கு பதிலாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில் பணம் வேண்டி நடிகை சுகன்யா மொய்விருந்து வைப்பது போல நடிகர் சங்கத்தில் இருப்பவர்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து விடுத்து மொய் விருந்து வையுங்கள்; அதில் அவர்களால் முடிந்த தொகையை தந்து உதவுங்கள் என்று நடிகர் சங்க தலைவரான விஷாலிடம் தெரிவித்தார்.

இந்தப் படத்தைப் போல மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் நடிகர் சங்கத்திற்காக யாரிடமும் கடன் கேட்டு நிக்காதீர்கள்; நடிகர் சங்கத்தில் உள்ள பிரபலங்கள் படப்பிடிப்பில் நல்ல வருமானங்களை ஈட்டி வருகின்றார்கள் அவர்களால் முடிந்த தொகையை தந்து உதவுங்கள் என்று மொய்விருந்து வையுங்கள் என்று ஆவேசத்துடன் கூறினார். மன்சூர் தந்த ஐடியாவிற்கு மக்கள் மத்தியிலும் திரை பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

