FLASH NEWS: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கார் விபத்து… மருத்துவமனையில் அனுமதி… காலையிலேயே பரபரப்பு…!

By Nanthini on மாசி 14, 2026

Spread the love

சென்னையில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைப்பக்க மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு நுங்கம்பாக்கம் பகுதியில் துக்ளக் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக துக்ளக் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த சமயத்தில் துக்ளக் மது அருந்தியிருந்தாரா அல்லது அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னையில், ஒரு பிரபல நடிகரின் மகன் சம்பந்தப்பட்ட இந்த விபத்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.