த்ரிஷா மீது வழக்கு தொடர்ந்த நடிகர் மன்சூர் அலி கான்… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு… இப்படி அவருக்கே Backfire ஆகிடுச்சே…

By Begam on மார்கழி 12, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான். இவர்  சமீபத்தில் திரிஷாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Mansoor Alikhan

   

இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி படுக்கையறை குறித்து ஆபாசமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்களும் பிரபலங்களும் என  பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் ஒரு சில நடிகர் மன்சூர் அலி கானுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

   

 

இதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலி கானை விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது. இப்படி தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் இணையத்தில் வைரலாக  மாறியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்சூர் அலிகான தனது ஸ்டைலில் ‘ என் சக திரை நாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு’ என்று நீண்ட பதிவு வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.

இதைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது இணையதள பக்கத்தில் ‘ தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம்’ என்று பதிவு செய்து கையெடுத்து கும்பிடும் மாதிரி ஒரு எமோஜியை போட்டு இந்த சர்ச்சைக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இந்த பிரச்னை இத்துடன் முடியவில்லை. நடிகர் மன்சூர் அலி கான் நீதிமன்றத்தில் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக த்ரிஷா, குஷ்பு உள்ளிடோர் மீது மன்சூர் அலி கான் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். ஒரு கோடி ருபாய் நஷ்ட ஈடும் மன்சூர் அலி கான் கேட்டிருக்கிறார்.

actor Mansoor Ali Khan

இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி மன்சூர் அலி கானை எச்சரித்து இருக்கிறார். ‘த்ரிஷா தான் இவர் மீது வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலி கான் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி எச்சரித்து இருக்கிறார். வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டுள்ளார் மன்சூர் அலி கான்.