பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இதில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா இந்திய அணிக்கு வெற்றியை தேடி. கொடுத்தார். இந்த தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது ஆசிய ஒருநாள் போட்டியின் இறுதியில் ஈரான் அணியை 75- 21 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் கண்ணகி நகர் கார்த்திகாவும் உண்டு.
#Watch | “ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன்..”
ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் மன்சூர் அலிகான்.#SunNews | #KannagiNagar | #Karthika | #MansoorAliKhan pic.twitter.com/cfq2hjKsw7
— Sun News (@sunnewstamil) November 2, 2025
தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியது. அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பாக 5 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதனை தொடர்ந்து பலரும் கார்த்திகாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு 10 கோடி பரிசு தொகையும், வீடும் கொடுக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கண்ணகி நகர் கார்த்திகாவை சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் மன்சூர் அலிகான், ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன் என்று கூறியுள்ளார்.
