CINEMA
நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் குடும்பத்தை பாத்துருக்கீங்களா? இவருக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருக்காங்களா.?
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வந்து கொண்டுள்ளார். நடிப்பிற்காக பல்வேறு படிப்புகளை முடித்த மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ” தாஜ்மஹால்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்க அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அனால் சிறந்த கதை, சிறந்த இசை என அனைத்தும் இருந்தும் இந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படமே தோல்வியை தழுவிய நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்த படத்தை காப்பாற்றியது.
தாஜ்மஹால் திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரம், கடல் பூக்கள் என ஒரு சில திரைப்படங்களில் தம்பி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மனோஜ் நடித்து வந்தார். தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் பலவும் தொடர் தோல்வியையும்,
சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று வந்த நிலையில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், மணிரத்னம் இயக்கிய பாம்பே மற்றும் இயக்குனர் ஷங்கரின் எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
பல்வேறு தடைகளைத் தாண்டி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தவித்துக்கொண்டிருக்கும் மனோஜ் பாரதிராஜா தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருக்காங்களா என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…