என் பெயரை அந்த இயக்குனர் ‘அடிமை’ என வைத்திருந்தார்.. அன்றுதான் ஒரு முடிவெடுத்தேன் – தான்பட்ட அவமானத்தைப் பகிர்ந்த மணிகண்டன்!

By vinoth on தை 24, 2025

Spread the love

காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன்.  அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில்  நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்றது.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்னைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

   

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸாகும் நிலையில் ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

   

இந்நிலையில் மணிகண்டன் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சந்தித்த அவமானங்கள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவர் என்னை நிறைய கொடுமைப் படுத்துவார். ஒரு நாள் அவர் ஃபோன் காணாமல் போய்விடவே அதற்கு என் நம்பரில் இருந்து Call பண்ண சொன்னார். நானும் செய்ய அவர் போன் சோஃபாவுக்கு அடியில் இருந்து ஒலித்தது.

 

அதை நான் எடுக்க சென்ற போது ‘எடுக்காதே’ என்று தடுத்தார். ஆனால் நான் அதற்குள் எடுத்து விட்டேன். அதில் என் பெயரை ‘அடிமை 1’ என பதிவு செய்து வைத்திருந்தார். அன்றுதான் நான் அவரிடம் இருந்து வெளியே வந்தேன். அதற்கு முன்னரே அவரிடம் இருந்து வந்துவிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அந்த சம்பவம்தான் என்னை அந்த முடிவை நோக்கி நகர்த்தியது.” எனக் கூறியுள்ளார்.