‘மலையாள சூப்பர் ஸ்டார்’ மம்மூட்டியின் அழகான மனைவியை பாத்துருக்கீங்களா?…  இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்…

By Begam

Published on:

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்நடிகர் மம்முட்டி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தமிழிலும் பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருந்தது. 1991 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டாரும், மலையாள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த திரைப்படம் தளபதி அது தான் அவரின் முதல் தமிழ் படம்.

   

அதற்குப்பிறகு மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் இவர் மட்டுமல்ல இவரின் மகன் துல்கர் சல்மானும் நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்.

தற்போது இவரின் மகன் துல்கர் சல்மான் அவர்களும் திரையில் தன் முத்திரையை பதித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் இவருக்கு முதல் படம் வாயை மூடி பேசவும் என்ற படம் தான். மேலும் இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் கூட தமிழ் மொழியில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து உள்ளார்.

மலையாள மொழி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி அவர்கள். தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவர் 1980 ஆம் ஆண்டு சல்பாத் குட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு துல்கர் சல்மான், குட்டி சுருமி என்ற இரு பிள்ளைகள் உள்ளார். தற்போது மம்முட்டியின் மனைவி சல்பாத் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.