தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து இருக்கிறார். பி.வாசு இயக்கி இருக்கும் இந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
இந்தத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே சினிமாவில் பிஸியாக இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார்.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவி திட்டங்களை செய்து வருகிறார். கடந்த ஆண்டு “மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம்” என சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்பொழுது இவர் வறுமை மற்றும் ஏழ்மையில் தவிக்கும் 6 குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பண உதவி செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இவர் தான் யா மனுஷன்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…