காமெடி உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்தவர் வடிவேலு. இவர் தன்னை தாழ்த்திக் கொண்டு அவர் செய்த காமெடிகள் ரசிகர்களை ஈர்த்தது. இதன் காரணமாக அவர் நடிக்காத படங்களை இல்லை என்ற நிலைமை தமிழ் சினிமாவில் உருவானது. இப்படி இருக்க அவருக்கும் மறைந்த விஜயகாந்த்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் விஜயகாந்தை பழிதீர்க்க திமுக பேச்சாளராக சென்றார் வடிவேலு. இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் வடிவேலுவை திரையில் பார்க்கவே முடியவில்லை.

இதனை அடுத்து அவருக்கு இதுபோன்ற சில பஞ்சாயத்துக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் நாய் சேகர் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்தார். அடுத்து மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்தார். இந்த படம் மெகா ஹிட் ஆனது. தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் . இதுஒருபுறமிருக்க சர்ச்சைகளில் இருந்து வடிவேலு வெளியே வந்துவிட்டார் என்று பார்த்தால் சக நடிகர்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு நீண்டு கொண்டே தான் போகிறது.

அந்த வகையில் பிரபல நடிகர் கொட்டாச்சி வடிவேல் குறித்து கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது கொட்டாச்சி வடிவேலு குறித்து கூறுகையில், “தயாரிப்பாளர் எப்பொழுதுமே எங்களை போன்ற நடிகர்களுக்கு சம்பளத்தை மொத்தமாக கொடுப்பார். அதை வடிவேலு நானே அவர்களிடம் கொடுத்துக் கொள்கிறேன் என்று வாங்கிக் கொள்வார்.

தயாரிப்பாளர் எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அதை வாங்கிக்கொண்டு எங்களுக்கு பாதி தான் சம்பளமாக கொடுப்பார் . ஆனால் மறைந்த நடிகர் விவேக் அப்படி கிடையாது. தன்னோடு நடிக்கும் நடிகர்களுக்கு தினமும் சம்பளம் எவ்வளவோ அதை அப்படியே கொடுக்க சொல்லிவிடுவார்” என்று கூறியுள்ளார்.
