‘ஊருக்கே ராஜானாலும் பொண்டாட்டிக்கு கூஜா தான்’…. பல சீக்ரெட்ஸ்களை நேரலையில் பகிர்ந்த ‘பசங்க’ பட நடிகர்…

By Begam on ஆடி 24, 2023

Spread the love

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் 2009ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘பசங்க’.  இத்திரைப்படத்தில் அன்பு  கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் கிஷோர். அந்த வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.  இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷோருக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விருதும், தேசிய விருதும் வழங்கப்பட்டது.

   

நடிகர் கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி. இதைத்தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் செய்வதில்லை என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

   

 

சீரியல் நடிகை ப்ரீத்தி நடிகர் கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதனால் இவர்கள் இணையத்தில் பலவாறு விமர்சனம் செய்யப்பட்டனர். இதற்கு பேட்டிகள் மூலம் அவர்கள் விளக்கமளித்தும் வந்தனர். இந்நிலையில் புதிதாய் திருமணம் செய்து கொண்ட இருவரும் தற்பொழுது ஜாலியாக அவுட்டிங்கும் சென்று வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் பல்வேறு பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சமீபத்திய பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்கள், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றிய பல்வேறு சுவாரசியமான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)