வெள்ளித் திரையில் மட்டுமின்றி… இயற்கை விவசாயத்திலும் களமிறங்கி கலக்கும் நடிகர் கிஷோர்… மனதை வருடும் புகைப்படங்கள் இதோ…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் கிஷோர்.

   

இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது.

குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ மற்றும் ரஜினி நடுவில் வெளியான’ கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

வில்லன், குணச்சித்திரம் என எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி போகிறவர் நடிகர் கிஷோர். அலட்டல் இல்லாமல் அழுத்தமாக முத்திரையை பதிப்பவர்.

இவர் இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். நடிகை கிஷோர் விஷாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான உணவை தங்களை உற்பத்தி செய்து கொள்ள விவசாய முறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தனது சூட்டிங் முடிந்த மீதி நேரம் இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை விவசாயத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை பற்றி கூறியிருந்தார்.

நடிகர் கிஷோர் பெங்களூர் இயற்கை விலை பொருள் விற்பனை கடை  ஒன்றையும் தற்பொழுது நடத்தி வருகிறார்.

தான் மட்டுமின்றி தனது குழந்தைகளுக்கும் இவர் இந்த விவசாயத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,, தற்பொழுது தனது பிள்ளைகளுடன் இணைந்து விவசாயத்தை கவனித்து வருகிறார் நடிகர் கிஷோர்.

லாப நோக்கத்திற்காக இந்த விவசாயத்தை இவர்கள் செய்யாமல் தங்களுக்கு பிடித்த ஒன்றை விருப்பப்பட்டு செய்து வருகின்றனர்.

பொருளாதார தேவைக்காக மட்டும் சினிமாவில் நடித்துக் கொண்டு வருவதாக நடிகர் கிஷோர் கூறியிருந்தார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கிஷோரும் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது நடிகர் கிஷோர் வயல்வெளியில் இறங்கி விவசாயம் செய்யும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.