#image_title
நடிகர் கவின் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் கல்லூரி கதை சீரியல் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்த இவர் அதைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி வந்த கவின் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட கவின் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. கடந்த வருடம் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுக்க தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டார் கவின். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் கவின் இயக்குனர் இலன் இயக்கத்தில் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நடிகர் கவிஞனின் நடிப்பும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் இப்படத்திற்கு பிளஸாக அமைந்துள்ளது. கடைசி வரை படத்தின் கதை சரியாக புரியவில்லை, ஆரம்பித்த இடத்திலேயே படம் கடைசி வரை இருந்ததாக ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் சினிமா விரும்பிகள் இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று பலவிதமான கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறனர். முதல் நாளில் சொல்லும் அளவிற்கு வசூல் சாதனை செய்யவில்லை. ஆனால் மற்ற படங்களுக்கு இது பரவாயில்லை என்று பலரும் கூறி வந்தனர். இந்த திரைப்படம் இப்போது மூன்று நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஸ்டார் திரைப்படம் மூன்று நாட்களில் 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூலில் நல்ல முன்னேற்றம் இருந்துள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து இப்படம் எந்த அளவுக்கு வெற்றி படமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…