இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு சினிமாவில் நடிகராக நுழைந்தவர் தான் நடிகர் கார்த்தி. இவர் பருத்திவீரன் திரைப்படத்தில் தான் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். தன்னுடைய அயராத உழைப்பால் தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறியவர். இவர் நடிப்பில் வெளியான கைதி, மெட்ராஸ், சர்தார் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. கார்த்தி பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களுடனே அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றாலும் விமர்சன ரீதியாக அந்த படம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இதனிடையே வா வாத்தியாரே திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகின்றார். அந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகின்றார். நீண்ட காலமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கார்த்தியின் கேரியரில் அதிக நாள் படப்பிடிப்பு நடந்த படம் என்றால் அது காஷ்மோரா திரைப்படம் தான்.

அதற்கு அடுத்ததாக அந்த சாதனையை வா வாத்தியாரே திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட 160 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கார்த்தி இன்னும் 20 நாள் கால் சூட்டை கொடுத்தால் மட்டுமே இந்த படத்தை முடிக்க முடியும் என நலன் குமாரசாமி கூறியுள்ளார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் கடும் அதிருப்தியில் இருக்கின்றார். ஆனால் கார்த்தி தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் என்னால் இப்போதைக்கு இந்த படத்திற்கு கால் சூட் தர முடியாது என கூறிவிட்டாராம்.
![]()
அதனால் வாத்தியாரே திரைப்படம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. மறுபக்கம் கடந்த வருடமே இந்த திரைப்படம் ரிலீசுக்கு வந்துவிடும் என்று அமேசான் நிறுவனமும் இந்த படத்தின் ரைட்சை வாங்கி இருக்க இன்னும் இந்த படப்பிடிப்பு முடியாத சூழலில் அமேசான் நிறுவனமும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றது.
