Categories: சினிமா

“கூட ஃப்ரண்டா நடிக்க ரெக்கமண்ட் பண்ணது மட்டுமில்ல… எனக்கு காரும் வாங்கிக் கொடுத்தார்”.. விஜய் பற்றி மலரும் நினைவுகளைப் பகிர்ந்த கில்லி பட நடிகர்..

Spread the love

சில நடிகர்கள் மட்டுமே ஒருசில காட்சிகளில் தோன்றினாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல துணை நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் கராத்தே ராஜாவும் ஒருவர். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக பள்ளிக்கூடங்களில் கராத்தே வகுப்பு நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு நல்ல அறிமுகத்தை வசூல் ராஜா எம்பிபிஎஸ் மற்றும் கில்லி ஆகிய திரைப்படங்கள் கொடுத்தன. கில்லி திரைப்படத்தில் முத்துப் பாண்டியன் அடியாளாக நூற்றுக் கணக்கானோர் வந்தாலும் இவரின் முகம் மட்டுமே ரசிகர்களுக்கு பரிச்சயமானது.

#image_title

இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்த ராஜா விஜய்யோடு போக்கிரி, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் இப்போது கில்லி படம் ரி ரிலீஸ் ஆகி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் விஜய் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் “விஜய் சார்தான் எனக்கு போக்கிரி படத்தில் அவரின் நண்பராக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். இதைத் தயாரிப்பாளர்களே என்னிடம் சொன்னார்கள். எனக்கு அந்த உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. அதே தயாரிப்பாளரிடம் ‘என்னிடம் கார் இல்லை என்று சொல்லி எனக்கு ஒரு அம்பாசிடர் கார் வாங்கித் தர சொல்லியுள்ளார். அவர்கள் உதவியால் நான் அம்பாசிடார் கார் வாங்கினேன்.

பின்னர் அழகிய தமிழ்மகன் ஷூட்டிங்கின் போது அவரிடம் கார் சாவியைக் கொடுத்து ஓட்டித் தர சொன்னேன். அவரும் கடவுளை வணங்கிவிட்டு என்னை வைத்து அந்த மைதானத்தில் ஒரு ரவுண்டு அடித்தார். இப்போது கடைசியாக நான் அவரை சென்று பார்க்கவில்லை. நான் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால் அவரோடு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago