Connect with us

அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்த ஆண்டவர்… என்ன ஆண்டவரே.. பிக் பாஸ் பிரதீப் வைக்க வேண்டிய டைட்டில் எல்லாம் நீங்க வைச்சிருக்கீங்க…

CINEMA

அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்த ஆண்டவர்… என்ன ஆண்டவரே.. பிக் பாஸ் பிரதீப் வைக்க வேண்டிய டைட்டில் எல்லாம் நீங்க வைச்சிருக்கீங்க…

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் . விரைவில் இத்திரைப்படம் ரிலீஸாக உள்ளது. அதோடு மட்டும் இன்றி அரசியலிலும் மிகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார் நடிகர் கமலஹாசன். இதைத்தொடர்ந்து அவர் பல திரைப்படங்களிலும் கமிட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

இறுதியாக பிக் பாஸில் போட்டியாளர் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இதனால் தற்பொழுது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் கமலஹாசன். பலர் கமலஹாசன் இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உலகநாயகன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கமல் 233, கல்கி, கமல் 234 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கமல் ஹாசனின் 234 படத்தை மணி ரத்னம் இயக்குகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்தின் டைட்டில் மாலை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இத்திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி, நடிகை திரிஷாநடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோ வெளியானது. இப்படத்திற்கு’ Thug life ‘ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்திரைப்படத்தின் டைட்டிலை பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஆண்டவரே.. பிக் பாஸ் பிரதீப் வைக்க வேண்டிய டைட்டில் எல்லாம் நீங்க வைச்சிருக்கீங்க..’ என்று கமெண்ட் செய்து அவரை கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
To Top