ராணுவ வீரராக நடிக்கிறாரா….? நடிகர் கமல்ஹாசனின் 233-வது படம்…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

By admin on புரட்டாதி 15, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து பிரபாஸ் உடன் நடிகர் கமல்ஹாசன் “கல்கி 2898 ஏ.டி” என்ற படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் கமல்ஹாசனின் 233-வது படத்தை வினோத் இயக்க உள்ளார்.

ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வினோத் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளார். அந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

   

   

அந்த படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நடிகர் கமல்ஹாசன் ராணுவ உடை அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

அதனை வைத்தே அவர் ராணுவ வீரராக நடிப்பதாக கூறுகின்றனர். ஆனால் பட குழு அதனை உறுதி செய்யவில்லை. ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.