வெளிநாட்டு வீதிகளில் ஜாலியாக நடனமாடி சுற்றித் திரியும் நடிகர் கமலஹாசன்… இந்த வயசுலயும் இவ்ளோ ஆக்டிவா இருக்கீங்களே…

By Begam on ஆனி 8, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். தற்பொழுது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் .அதோடு மட்டும் இன்றி அரசியலிலும் மிகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார் நடிகர் கமலஹாசன்.

   

இந்நிலையில் நடிகர் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளிவந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், தற்போது அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு கொண்டாடியுள்ளனர். இயக்குனர் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் விக்ரம்.

   

 

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராமலிங்கம் என  பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் முடிந்ததை தொடர்ந்து வீடியோ ஒன்றை இணையத்தில் படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Dhana Sk (@_dhanaofficial)