மகள் ஸ்ருதிஹாசனின் திருமணம்.. மேடையில் ஓப்பனாக பேசிய கமலஹாசன்.. ஸ்ருதி கொடுத்த ரியாக்ஷன்..!

By Mahalakshmi on ஜூன் 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வளம் பெற்றவர் இயக்குனர் சங்கர். இவர் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் கூட்டணியின் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் -ஆக உள்ளது. இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் என்பதால் ரசிகர்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு இருக்கின்றது.

   

கமல் கடைசியாக நடித்த விக்ரம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவில் கலக்கி வருகின்றார். ஏற்கனவே இந்த படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. பட்ஜெட் பிரச்சனை, கிரேன் விபத்து போன்ற காரணங்களால் இந்தியன் டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்தியன் 2 பட்ஜெட் பிரச்சினைக்கு ரெட் ஜெயின் முற்றுப்புள்ளி வைத்தது.

   

 

அதாவது இந்தியன் 2 படத்தை லைக்காவுடன் இணைந்து ரெட் ஜெயின் நிறுவனமும் தயாரித்திருக்கின்றது. இந்தியன் இரண்டாவது பாகம் வருமா? வராதா? என குழம்பி இருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்தியன் 3 திரைப்படமே உருவாக இருக்கின்றது. இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று மிகவும் சிறப்பாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உலகநாயகன், கமலஹாசன், சங்கர், சிம்பு, சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இசை வெளியீட்டு விழாவின்போது மேடையில் தனது உரையை முடித்த பின் கமலிடம் சில கேள்விகளை தொகுப்பாளராக இருந்த நடிகர் சிவா கேட்டிருந்தார்.

அதில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் கோடான கோடி மக்களுக்கு இந்தியன் தாத்தா என சொல்ல விரும்புகிறார் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு இந்தியன் தாத்தா சொல்லிட்டாரு இப்போ நான் சொன்னதுதான் என் மகள் ஸ்ருதிஹாசன் மனசு வைத்திருந்தால் நான் இப்பவே தாத்தா தான் என்று மகளின் திருமணம் குறித்து பேசியிருந்தார். இதற்கு மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த ஸ்ருதிஹாசன் வேண்டாம் என்பது போல் தலையை அசைத்துக் காட்டினார்.