Connect with us

‘உங்களுக்கு எப்படி திருப்பி கொடுக்குறதுன்னே தெரியல’…! திடீரென வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகர் காளி வெங்கட்…!

CINEMA

‘உங்களுக்கு எப்படி திருப்பி கொடுக்குறதுன்னே தெரியல’…! திடீரென வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகர் காளி வெங்கட்…!

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் காளி வெங்கட். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சினிமாவில் இவருக்கு குரு என்றால் அது விஜய் பிரபாகரன் தான். இவர் ‘வா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெகடி, முண்டாசுப்பட்டி, மாரி, இறுதிச்சுற்று உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.

   

இவர் இறுதி சுற்றுப் படத்தில் கதாநாயகிக்கு தந்தையாக நடித்திருப்பார். விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஆட்டோ டிரைவராக வந்து அனைவரது மனதையும் கவர்ந்திருப்பார். தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா, விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்களின் நடித்திருக்கிறார். தற்பொழுது வரை பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இறுதியாக இவர் இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில்  ஜூலை 21 ஆம் தேதி வெளியான ‘அநீதி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காளி வெங்கட் நடிப்பை பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் நன்றி தெரிவித்து காளி வெங்கட் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “தங்கப்பிள்ளை கதாபாத்திரத்தை பயங்கரமாக திக்குமுக்கு ஆடுற அளவிற்கு எல்லாரும் கொண்டாடுறீங்க. அதைப் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் சாருக்கும், ஷங்கர் சாருக்கும் நன்றி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பேராதரவு. எல்லா படங்களுக்கும் கொடுப்பது மாதிரி தான். ஆனால் இந்த படத்துக்கு பல மடங்கு அதிகமாக கொடுத்துருக்கீங்க. சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரின் விமர்சனத்தை படிக்கும் போது மற்றும் ஃபோனில் அழைத்து பேசியவர்களின் உணர்வையும் கேட்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன திருப்பி கொடுக்கிறது என்று தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Kaali Venkat (@kaaliactor)

Continue Reading
To Top