மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் பப்பூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆண்டனி என்ற மலையாள திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். குறைந்த அளவு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் ஆண்டனி திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் லண்டன் சென்றுள்ளார். அங்கு அவரிடம் இருந்து 15,000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது. அதே சமயம் அவரது பாஸ்போர்ட்டும் மாயமானதாக கூறப்படுகிறது. படக்குழுவினருடன் லண்டனில் ஷாப்பிங் சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாகவும் படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரின் பாஸ்போர்ட் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தலையிட்டு காணாமல் போன பாஸ்போர்ட்டுக்கு பதிலாக தற்காலிக பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் படக்குழுவினருடன் இந்திய திரும்பியுள்ளார். பிரபல நடிகரிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…