பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெய்சங்கரின் மகனா இவர்?… இந்த சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்கிறாரா?…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பழம்பெறும் நடிகர் ஜெய்சங்கர். இவர் பெரும்பாலும் சண்டைக் காட்சிகள், துப்பறிவாளன், காவலர் போன்ற வேடங்களில் தான் அதிகம் நடித்திருப்பார். இதனால் இவர் ‘தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

   

இவர் நடிகர் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர். நடிகர் ஜெய்சங்கர் 1965 இல் வெளியான இரவு பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி இவர் அந்த காலகட்டத்திலேயே பல சமூக நலத்திட்ட உதவி பணிகளையும்  செய்து வந்துள்ளார்.

இதை தொடர்ந்து 2020ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஜய் சங்கர் இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர் இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

தற்பொழுது இவரின் மகனான சஞ்சீவ் சங்கரின் பேட்டி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘நான் அவரின் மகன் என்று அதிகம் சொல்ல மாட்டேன். அவரே சொல்லி இருக்கிறார் தேவை என்றால் மட்டும் தான் பெயரை சொல்ல வேண்டும் என்று.’ மேலும் தனது தந்தை தொடர்பான பல சுவாரசியமான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் ஜெய்சங்கரின் மகன் சஞ்சய்.