தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.
குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ஜீவா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கற்றது தமிழ். ராம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜீவா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காமல் போனதற்கான காரணம் குறித்து சமீபத்தில் அடித்த பேட்டியில் ஜீவா பேசியுள்ளார்.
அதில், கற்றது தமிழ் படத்தில் அனைவரும் ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணினோம். தேசிய விருது கிடைக்கும் என்று எல்லோரும் உசுப்பேத்தி விட்டுட்டாங்க. ஆனா கடைசியில ஒரு விருது கூட கிடைக்கல. ஏனென்றால் தயாரிப்பாளர் இறந்து விட்டதால் எங்களால் தேசிய விருதுக்கு அப்ளை பண்ண முடியல. அந்தப் படத்துக்கு பிறகு விருது மேல இருக்க ஆசையே போயிருச்சு. மக்கள் கொடுக்கிற பாராட்டு தான் விருது என்று அவார்ட் ஃபங்ஷனுக்கே நான் போறது இல்ல என்று ஜீவா பேசியுள்ளார்.