தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராம். இந்தத் திரைப்படம் ஜீவாவிற்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இயக்குனர் அமீர் இயக்கிய இந்த படத்தில் காமெடியனாக நடித்தவர்தான் நடிகர் கஞ்சா கருப்பு. இந்த படத்திற்கு முன்னால் இயக்குனர் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் கஞ்சா விற்றுக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததால் தான் இவருக்கு கஞ்சா கருப்பு என்ற பெயரும் வந்தது. ராம் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு நண்பராக நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் வாழ வந்தான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் கஞ்சா கருப்புவுக்கு அந்த படத்திற்கு பிறகு தான் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படியான நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த பேட்டியில் ராம் திரைப்படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நானும் கஞ்சா கருப்புவும் ராம் திரைப்படம் முடிந்த பிறகு காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று இருந்தோம்.
அங்கு மூட்டை தூக்கக்கூடிய ஒரு நபர் தூரத்தில் இருந்து என்னை அழைத்து நீங்கதான் ராமா என்று கேட்டார். ஆமா என்று சொன்னதும் எனக்கு ஒரு வணக்கம் வைத்தார். பிறகு அவரை கூப்பிடுங்க என்று சொன்னதும் அருகில் இருந்தால் கஞ்சா கருப்புவை உன்னை கூப்பிடுறாங்க என்று நான் சொன்னேன். அவர் திரும்பிப் பார்த்ததும் நீங்க தான் அந்த குதிரைக்காரரா என்று அந்த மூட்டை தூக்கும் நபர் கேட்டார்.
ஆமா சாமி நான் தான் அது என்று கூறிவிட்டு கஞ்சா கருப்பு அப்படியே காலில் விழுந்து விட்டார். அப்படியே எங்கள மாதிரியே பண்ணி இருக்கியே சாமி என்று ஆச்சரியமாக பேசினார். இன்று தான் நான் முடிவு செய்தேன் சினிமாவுக்காக இல்லாமல் மக்கள் விரும்பக்கூடிய கதாபாத்திரத்தில் அவர்களுக்கு பிடித்தவாறு படங்களில் நடிக்க வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன் என ஜீவா பேசியுள்ளார்.
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…