இந்த போட்டோவில் சூப்பர் ஸ்டாரை நெஞ்சோடு கட்டிபிடித்திருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா?… யாருன்னு தெரிஞ்சா கீழ கமெண்ட் பண்ணுங்க…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘ஜெயிலர்’ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்பொழுதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது . இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்திலும் நடித்துள்ளார்.

   

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இது கேமியோ ரோல் தான் என்றும் சொல்லப்படுகிறது. தற்பொழுது இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார்.   இதுகுறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார்.

இத்திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது. சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அந்தவகையில் தற்பொழுது நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் சூப்பர் ஸ்டாரை நெஞ்சோடு கட்டியணைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது . இந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவரை பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை என்ற அளவிற்கு பிரபலமானவர். இதோ அந்த புகைப்படம்…