அருணாசலேஸ்வரரே காப்பாத்து…! மனைவியுடன் திருவண்ணாமலை கோவில் சாமி தரிசனம் செய்த நடிகர் ஹரிஷ் கல்யாண்…!

By Begam on புரட்டாதி 21, 2023

Spread the love

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன் ஆவார். 2010ல் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்பொழுது இவர் இயக்குனர் சுசி இயக்கத்தில் உருவாகும் நூறு கோடி வானவில் மற்றும் டீசல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த ஹரிஷ் கல்யாண் இரண்டாவது 2 ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஹரிஸ் கல்யாண்.

   

 

இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து கூறினர். தற்பொழுது இவர் திருமணத்திற்க்கு பிறகு முதன் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.  இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.