தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம் மற்றும் சந்தா மாமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் சில தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் கூட நடித்துள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

வைல்டு கார்டு என்ட்ரி மூலமாக இரண்டாவது நாளில் உள்ளே நுழைந்த இவர் 98 நாட்கள் தாக்குப்பிடித்து இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் மிகவும் நேர்த்தியான காதல் கதைகளை தேர்வு செய்து நடித்த தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மன பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், LGM உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்துமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் குடிகொண்டு விட்டார். தற்போது இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனிடையே நடிகர் ஹரிஷ் கல்யாண் நர்மதா என்ற பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே காதலில் தோல்வி அடைந்த இவர் பெற்றோர் பார்த்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவரிடம் தொகுப்பாளர்,”நீங்கள் தெருச்சண்டை போட்டது உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆமாம். ஸ்கூல் படிக்கும்போது டியூஷன் போகும்போது நான் லவ் பண்ணுன பொண்ணை வேறு பையன் சைட் அடிச்சான். அதை பார்த்து கோபத்தில் நானும், என் நண்பனும் சேர்ந்து அவனிடம் சண்டை போட்டோம். என் நண்பனுக்கும் அவனுக்கும் அடிபிடி சண்டை ஆகிடுச்சு” என்று கூறியுள்ளார்.
