தமிழ் சினிமாவில் முதல் முறையாக லப்பர் பந்து திரைப்படத்தில் ஹீரோ அட்டகத்தி தினேஷ் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள நிலையில் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்தப் படத்தில் பல விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடல் பெரிய புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாடலாக உள்ளது.
அதனைப் போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு வெற்றியை கொடுத்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் 3 பவுன் தங்க சங்கிலியை பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது…
பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழக அரசியல் சூழல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும்…
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், அவை தானாகவே…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், 37.90 கோடி ரூபாய்…
தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா தொலைபேசி வாயிலாகத்…