தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர்’ சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சட்டப்படி குற்றம், அரிது அரிது, பொறியாளன், சந்த மாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்கள் அவ்வளவாக ரசிகர்கள் மத்தியில் சென்றடையவில்லை.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தின் மூலம் இவர் பிரபலமானார். இவர் நடித்த தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது ‘டீசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவரின் மனைவி நர்மதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சூப்பரான கிப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண். மேலும் அவர் தற்பொழுது அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…