“பிக்பாஸ் உள்ள நடக்குறது எல்லாமே நாடகம், சிகரெட் பிடிக்கிற ரூமுக்குள்ள எல்லா அசிங்கமும் நடக்குது”.. – விளாசித் தள்ளிய கஞ்சா கருப்பு

By admin on கார்த்திகை 10, 2023

Spread the love

விஜய் டிவி நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் நடிகர் கஞ்சா கருப்பு. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்த அனுபவம் குறித்து, ஒரு நேர்காணலில் அவர் பேசியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு வந்துவிட்டால், வாழ்க்கை மாறும் என்பார்கள். ஆனால் எந்த மாற்றமும் வராது. இன்னும் நிலமை மோசமாக தான் போகும். நேரம் சரியில்லாதவன், தலை எழுத்து நல்லா இல்லாதவன், சனி பிடித்தவன்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் போவான். பிக்பாஸ் வீட்டுக்குள்ள நடக்கிறது எல்லாமே நாடகம்தான்.

 Actor Ganja Karupu

   

பிக்பாஸ் ஒரு கோமாளி. அந்த ஆளை நேரில் பார்த்தால், உனக்கு வேற தொழில் இல்லையா என்றுதான் நான் கேட்பேன். நம்ம வீட்டுல பொண்ணுகளை நல்ல விதமா டிரஸ் பண்ணுன்னு கண்டிசன் பண்ணுவோம். நல்லதை சொல்லிக் கொடுப்போம். கவுரவமாக வாழச் சொல்லுவோம். ஆனால், அந்த வீட்டுக்குள்ள இருக்கிற சூழ்நிலையை பார்த்தால், ரொம்ப வேதனையா இருக்குது.

   

 Actor Ganja Karupu

 

பிக்பாஸ் வீட்டுக்குள்ள சிகரட் புடிக்கறதுன்னு ஒரு ரூம் இருக்குது. அங்க ஆம்பளைங்க, பொண்ணுங்க சிகரட் பிடிக்கறாங்க. பொண்ணுங்க சிகரட் பிடிக்க அனுமதிக்கலாமா? அந்த ரூமுக்குள்ள எல்லா அசிங்கமும் நடக்கிறது. அங்கேயே இருந்திருந்தா, நானே கத்தியில குத்திக்கிட்டு செத்திருப்பேன். கட்சி நடத்தறவங்களுக்கு அறிவு வேணாமா, இது என்ன சிங்கப்பூரா, மலேசியாவா. பொம்பளை சிகரெட் பிடிக்க அனுமதிக்கலாமா என விளாசித் தள்ளி இருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு.