மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் வடிவேலுவின் அரசியல் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அதிமுக உடைந்து சிதறிவிட்டதாக வடிவேலு கூறியதற்குப் பதிலடி கொடுத்த அவர், “இது எங்கள் வீட்டுப் பங்காளி சண்டை, இது நாளைக்கே முடிந்துவிடும்; இதில் தலையிட நீ யார்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், வடிவேலுவை ‘வீணாய்ப்போனவர்’ என ஒருமையில் சாடியதுடன், அதிமுகவின் உள்விவகாரங்களைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கஞ்சா கருப்பு, வடிவேலுவை “ஆமை” என உருவகப்படுத்தி விமர்சித்ததுடன், அவர் எப்போது அதிமுகவை எதிர்த்துப் பேசினாரோ அப்போதே தங்கள் கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டதாகத் தெரிவித்தார். 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்களைப் பாராட்டிப் பேசினார்.
தென்னாப்பிரிக்காவில் அரங்கேறிய இந்த திகிலூட்டும் சம்பவம், மனித வேட்டைக்கும் இயற்கையின் கொடூரத்திற்கும் இடையிலான ஒரு மெல்லிய கோட்டைப் பிரதிபலிக்கிறது. வெள்ளத்தில்…
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரைச் சேர்ந்த மிஷேல் மற்றும் லவினியா ஆஸ்போர்ன் சகோதரிகளின் கதை, மருத்துவ உலகின் ஆகச்சிறந்த அதிசயங்களில் ஒன்றாக…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, புதியதொரு அத்தியாயம் தொடங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக திமுக-வுடன் நீடித்து…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்று காலை முதலே போர்க்களமாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகல்…