தனது மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு  நடத்திய நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

By Samrin

Published on:

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அபியும் நானும்’.

   

இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரிஷா, பிரகாஷ்ராஜ் , ஐஸ்வர்யா,  கணேஷ் வெங்கட்ராமன்,  பிரித்விராஜ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ஜோகிந்தர் சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.

இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே நடிப்பு, மாடல் போன்ற துறைகளில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இவர் கல்லூரியில் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு மென்பொருள் வல்லுனராக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

அதை தொடர்ந்து இவர் மாடலாக தனது பயணத்தை மேற்கொண்டார். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற “மிஸ்டர் இந்தியா” போட்டியில்  கலந்து கொண்டு வெற்றியாளராக மகுடம் சூட்டினார்.

இவர் சுமார் 200 விளம்பரங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயாவி 3டி என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தி அஞ்ச்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில்  உன்னைப் போல் ஒருவன்,  கோ,  பனித்துளி,  தீயா வேலை செய்யணும் குமாரு,  சந்திரா,  இவன் வேற மாதிரி,  பள்ளிக்கூடம் போகாமலே, தனி ஒருவன் போன்ற  படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம் போன்ற மொழி படங்களிலும் இ நடித்துள்ளார்.

நடிகர் கணேஷ் பிரபல நடிகர்களான கமலஹாசன், அமிதாபச்சன்,  மோகன்லால் போன்ற  முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்  சீரியல் நடிகை நிஷா என்பவரை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது .

நடிகை நிஷா கனா காணும் காலங்கள், வள்ளி, தெய்வமகள்,  சரவணன் மீனாட்சி,  மகாபாரதம்,  நெஞ்சம் மறப்பதில்லை,  அபி டெய்லர்,  செம்பருத்தி போன்ற  சீரியல்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் இவன் வேற மாதிரி,  நான் சிவப்பு மனிதன்,  என்ன சத்தம் இந்த நேரம் போன்ற ஒரு சில படங்களில்  நடித்துள்ளார்.

நடிகை நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.தற்போது அந்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.