நள்ளிரவில் பிரபல தமிழ் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்… ஆழ்ந்த இரங்கல்…!

By Nanthini on ஆடி 19, 2025

Spread the love

தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஃபிஷ் வெங்கட் என்கின்ற வெங்கட்ராஜ். சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் போன்ற முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் இணைந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அவருக்காக பிரபாஸ் ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவினார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மீன் வியாபாரம் செய்ததால் ஃபிஷ் வெங்கட் என இவர் அழைக்கப்பட்டார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.