கருடன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர் பிரபல நடிகரின் மகனா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

By Mahalakshmi on ஆனி 10, 2024

Spread the love

பிரபல தயாரிப்பாளரும், குணச்சித்திர நடிகருமான ஜெயப்ரகாஷின் மகன்தான் கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த துஷ்யந்த் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல குணச்சித்திர நடிகர். நடிகைகள் பிரபலமான நடிகர்கள் அளவிற்கு பாராட்டப் படுவார்கள். அப்படி பாராட்டப்பட்ட நடிகர் தான் ஜெயபிரகாஷ். முதலில் தயாரிப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கிய இவர் அதன் பின்னர் நடிகராக அறிமுகமானார். செல்லமே, ஏப்ரல் மாதத்தில், தவசி போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் ஜெயபிரகாஷ்.

   

   

பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த இவர் சேரனின் மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தாலும், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம் பசங்க தான். அந்த திரைப்படத்தில் பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

 

அதைத்தொடர்ந்து நாடோடிகள், நான் மகான் அல்ல, ரௌத்திரம், எதிர்நீச்சல், தனி ஒருவன், தங்க மகன், கதகளி, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். மங்காத்தா திரைப்படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடித்திருந்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் ஹீரோவாக மிகச்சிறந்த கணவராக நடித்த அசத்தியிருந்தார்.

இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் .இதில் மூத்த மகன் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடிகராக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார், ஈசன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஐவராட்டம் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது சூரி நடிப்பில் வெளியாகி சக்க போடு போட்டு வரும் கருடன் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கின்றார். இதை கேள்விப்பட்ட பலரும் அவரின் மகனா இவர் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.