நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.
அவுட் ஆப் லவ் என்ற வெப் சீரியஸ் மூலமாக சினிமா துறையில் மீனாட்சி என்ட்ரி கொடுத்தார். அவர் 2021-ல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் தனது முன்னணி திரைப்படத்தில் அறிமுகமானார்.
இவர் விஜய் ஆண்டனியின் கொலை, ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் ஆகிய படத்திலும் நடித்துள்ளார். நடிகை மீனாட்சி சுந்தரிக்கு மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம்.
அவர் பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் மிஸ் கிராண்ட் இந்தியா பட்டத்தை வென்றார். தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் என்ற திரைப்படத்திலும் மீனாட்சி நடித்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இப்போது டைட்டான உடையில் மீனாட்சி பகிர்ந்த போட்டோஸ் வேகமாக பரவி வருகிறது.