இந்த புகைப்படத்தில் தனது அம்மாவுடன் இருக்கும், இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா..?

By Begam

Updated on:

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர்  மம்மூட்டி அவர்களின் மகன்  நடிகர் துல்கர் சல்மானின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

   

இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மற்ற நடிகர்களைப் போல கதையை தேர்வு செய்யாமல் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அவரது ரசிகர்களை படத்தின் மூலம் பிரமிக்க வைத்து வருகின்றார்.இவர் என்னதான் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.

தனது அணுகுமுறை மற்றும் எதார்த்தமான பேச்சு ரசிகர்களை தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவிற்கு வசூல் பெற விட்டாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மலையாளத்தில் ‘கிங் ஆப் கோத்தா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தின் விளம்பர பலகைகளில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது . இதைத்தொடர்ந்து தற்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்பொழுது நடிகர் துல்கர் சல்மானின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.