நடிகர் தனுஷ் அணிந்திருக்கும் இந்த வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா..? இந்த காசு இருந்தா பல வருஷம் நாம வாழலாம் போலயே…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனது தந்தை இயக்கிய ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், காதல் கொண்டேன், திருடா திருடா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தாலும், தனது ஒல்லியான தோற்றத்தால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒருவராக மாறி உள்ளார்.

   

இடையில் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தாலும் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற படங்களின் மூலம் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். இதை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா என்ற ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் வெளியான ஷமிதாப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 2021ல் வெளியான ‘அத்ரங்கி ரே’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை தனுஷ் வென்றுள்ளார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும்  விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது 50 வது பட பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by The Brand Dude (@the_brand_dude)

நடிகர் தனுஷ் ஒரு வாட்ச் பிரியர் என்பது நமக்கு தெரியும். அவரிடம் கோடி ருபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த வாட்சுகள் அதிகம் உள்ளன. அவற்றில் ஒன்றை பற்றி இதில் நாம் பார்க்கலாம். நடிகர் தனுஷ், சமீபத்தில் நடந்து முடிந்த கேப்டன் மில்லர் ஆடியோ லாஞ்சிற்கு Patek Philppe 5712 1A ரக வாட்ச் ஒன்றை அணிந்து வந்திருந்தார். இந்த வாட்சின் விலையை கேட்டா சும்மா அசந்து போயிடுவீங்க. நடிகர் தனுஷ் அணிந்திருந்த, பல்வேறு சிறப்பம்சங்களை  கொண்ட இந்த வாட்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி என கூறப்படுகிறது.

author avatar