Categories: சினிமா

Rolls Royce கார், போயஸ் கார்டனில் 150 கோடி பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழும் நடிகர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரின் நிஜப்பெயர் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா. திரைத்துறைக்காக தனது பெயரை தனுஷ் என மாற்றி கொண்ட இவர் தனது திறமை மற்றும் விடா முயற்சியின் மூலம் தற்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்காத  இடத்தை பிடித்துள்ளார்.  காதல் கொண்டேன் மற்றும் புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் இவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் கலக்கிய இவர், ஆடுகளம், 3 போன்ற படங்களின் மூலம் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார். இவர் நடிகராக மட்டுமின்றி எழுத்து, இயக்கம், திரைப்பட தயாரிப்பு போன்ற பன்முக திறமைகளை கொண்டவர். தற்பொழுது இவர் தனது 50 வது பட பணிகளை கவனித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

#image_title

இப்படி திரையுலகில் கலக்கி வரும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் மொத்த சொத்து மதிப்பு தற்போதைய நிலவரப்படி 223 கோடி என்று கூறப்படுகிறது. இதுவரை 50 திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடியிலிருந்து ரூ. 20 கோடி வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இவரிடம் Jaguar XE- ரூ. 45 லட்சம், Ford Mustang- ரூ. 75 லட்சம், Bentley Continental Flying Spur- ரூ 3.40 கோடி, Rolls Royce Ghost- ரூ. 7 கோடி, Audi A8- 1.65 கோடி போன்ற சொகுசு கார்கள் உள்ளன.

இது மட்டுமின்றி போயஸ் கார்டனில் 150 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றும், ஆழ்வார்பேட்டையில் 18 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றும் உள்ளது. சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் அதன் மூலமும் பல ஹிட் படங்களை கொடுத்தும்  லாபம் ஈட்டி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 7.1 மில்லியன் ஃபாலோயர்களும், ட்விட்டரில் 11.6 மில்லியன் பாலோயர்களும் பின்தொடர்கின்றனர். இதன் மூலமும் நடிகர் தனுஷுக்கு வருமானம் கிடைக்கிறது. 

Begam

Recent Posts

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

2 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

7 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

11 minutes ago

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago