லயன் கட்டி நிக்கும் 6 படங்கள்.. அவமானங்கள், தடைகளை தவுடு பொடியாக்கி 24 மணி நேரமும் அயராது உழைக்கும் தனுஷ்..

By Mahalakshmi on மே 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார். ஹீரோவாக சினிமாவிற்குள் அறிமுகமாகி மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கின்றார். தற்போது நடிகராக மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார்.

   

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்று அசதி வருகின்றார். பேரும் புகழும் எப்போதும் தலைக்கு ஏறக்கூடாது அப்படி ஏறிவிட்டால் அது நம்மை தலைகனம் பிடித்தவனாக மாறிவிடும் என்பதில் உறுதியாக இருக்கிறார் தனுஷ். அதேபோல் நாம் சந்திக்கும் அவமானங்களையும் பிறர் பேசுவதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தனது பாதையில் ஓடிக் கொண்டிருக்கின்றார்.

   

பல சர்ச்சைகள் தனுசை சுற்றி வலம் வருகின்றன. ஏற்கனவே விவாகரத்து என்று கஷ்டத்தில் இருக்கும் தனுஷை பாடகி சுசித்ரா கண்டபடி பேசி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றார். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகின்றார். மேலும் இரண்டு திரைப்படங்களை இயக்கிக் கொண்டும் இருக்கின்றார்.

 

அந்த வகையில் தனுஷ் கைவசம் தற்போது ஆறு படங்கள் இருக்கின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அடுத்ததாக தனுஷின் 50-வது படமாக ராயன் திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி நடித்து வருகின்றார். இதில் அவருடன் சேர்ந்து பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இதை எடுத்து இளையராஜாவின் பயோபிக் கதை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இது மட்டும் இல்லாமல் அமரன் திரைப்படத்தை இயக்கி வரும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

இப்படி கையில் வரிசையாக படங்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். தனக்கு வரும் அவமானங்களை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு பிஸியாக நடித்து. வருகிறார் இருப்பினும் அவரது சொந்த வாழ்க்கை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சுமுகமாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.