நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா..? தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வைத்த செக்…

By Begam

Published on:

தமிழ் திரையுலகில் ஹீரோவாக தனுஷ் முதலில் என்ட்ரி கொடுத்திருந்தாலும், இவர் மூலமாக வந்த சிவகார்த்திகேயன் தனுஷுக்கு இணையாக வந்துவிட்டார். அதுவும் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இரண்டு பேரும் சமமாக இருக்கிறார்கள்.

   

அப்படிப்பட்ட இவர்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திற்கும் போட்டி போட்டு முந்துவதற்கு முயற்சி செய்து நடித்து வருகிறார்கள். தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது . நடிகர் தனுஷ் தனது 50 வது திரைப்பட பணிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

தற்பொழுது நடிகர்  விஜய் சினிமாவை விட்டு விலக இருப்பதால் , சிவகார்த்திகேயனை ‘அடுத்த இளைய தளபதி’ என்று ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர். தனுஷால் அறிமுகப்படுத்தப்பட்ட  நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 40 கோடி வரை வாங்குகிறார். ஆனால் நடிகர் தனுஷ் இதுவரை 25 கோடி மட்டுமே வாங்குகிறார்.

இதனால் தற்பொழுது அவர் சிவகார்த்திகேயனே 40 கோடி  வாங்கும் பொழுது,  சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டு தற்பொழுது அவர் ஹெச் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கு 45 கோடி கேட்டு , இறுதியில் 40 கோடி பேசி முடித்துள்ளாராம். மொத்தத்தில் குருவை  சிஷ்யனாகி விட்டார் சிவகார்த்திகேயன்.