Categories: சினிமா

“என் உழைப்பை சுரண்டி நயன்தாரா கொள்ள லாபம் பார்த்துட்டாங்க”.. நடிகர் தனுஷ் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Spread the love

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதனிடையே நயன்தாரா திருமணம் குறித்த வீடியோ Netflix ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அது ஒரு ஆவண படமாக வெளியிடப்பட்டது. இதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 25 கோடி வாங்கியதாக தகவல் வெளியானது. திருமணத்திற்கான மொத்த செலவு 5 கோடி கூட வராத நிலையில் தன்னுடைய திருமணத்தை வைத்து நயன்தாரா பல கோடி லாபம் பார்த்ததாக விமர்சனங்களும் எழுந்தது.

அதேசமயம் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்த சில முக்கிய திரைப்படங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. நானும் ரவுடிதான் திரைப்படம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் ஒன்று சேர காரணமாக இருந்த திரைப்படம் என்பதால் தங்களுடைய முதல் சந்திப்பு குறித்த காட்சியை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற செய்திருந்தனர். இப்படியான நிலையில் தனுஷ் தனது அனுமதி இல்லாமல் தான் தயாரித்த படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்காக சுமார் 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் என நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு வழக்கு தொடர அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் பட காட்சியை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ், நயன்தாரா 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது மட்டுமல்லாமல் இந்த காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது. இதற்கு நயன்தாரா திரைப்படத்தில் பயன்படுத்திய காட்சியை இந்த படத்தில் இணைக்கவில்லை என்றும் தங்களுடைய சொந்த சேகரிப்பில் இருந்தே இந்த காட்சியை பயன்படுத்தியதாகவும் விளக்கம் அளித்தார்.

இப்படியான நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் நெட்பிலிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி இனி கால அவகாசம் கேட்கக்கூடாது என்றும் அன்றைய தினம் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளி வைத்தார். இப்படியான நிலையில் தனது உழைப்பை சுரண்டி வர்த்தக நோக்கத்தில் நடிகை நயன்தாரா லாபம் பார்த்து உள்ளதாக தனுஷ் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். திருமண ஆவணப்பட வழக்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மனுவுக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago