கல்யாண வீடுகளில் சாப்பிடாத நடிகர் டெல்லி கணேஷ்… அதற்கு இதுதான் காரணமா…?

By Soundarya on நவம்பர் 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அவர்களின் ஒருவர் டெல்லி கணேஷ். இவர் தவிர்க்க முடியாத நடிகர். வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடிக்க கூடியவர். இவர் பாலச்சந்திரன் பட்டறையிலிருந்து வந்தவர் .ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரோடும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

டெல்லி கணேஷ் என பெயர் வந்தது எப்படி? எவ்வளவு பணம் கொடுத்தாலும் அப்படி  மட்டும் நடிக்க மாட்டேன் - சினிஉலகம்

   

இவர் 1979 ஆம் வருடம் துறை இயக்கத்தில் வெளியான பசி என்ற படத்தில் முனியாண்டி என்ற ரிக்ஷா டிரைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .அதற்காக அவருக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. சமீபத்தில் கூட ஒருசில படங்களில் நடித்து வந்தார்.

   

நடிகர் 'டெல்லி' கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்  | Chief Minister M.K. Stalin condolences on the death of actor 'Delhi'  Ganesh. - hindutamil.in

 

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திடீரென்று காலமானார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். இரவு தூக்கத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார். இந்நிலையில் இவர் குறித்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Delhi Ganesh passes away | நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

அவருடைய சமீபத்திய பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, கல்யாண வீடுகளில் போனால் சாப்பிட மாட்டேன். இலை போட்டு அவ்வளவு ஐட்டங்களையும் வைத்து எவன் சாப்பிட்டுவிட்டு அவஸ்தை படுறது. அதனால் மேலே போய் அங்கிருக்கும் பாயசத்தை வாங்கி குடிப்பேன். நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பிடுவேன். கல்யாண வீட்ல கேட்டால் ஆமா பிரமாதம் சூப்பரா இருந்துச்சின்னு சொல்லிட்டு வந்திடுவேன் என்று கூறியுள்ளார்.

author avatar
Soundarya