இறந்தும் பிறரை வாழ வைக்கும் நடிகர் டேனியல் பாலாஜி.. அவரது செயலால் நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்..!!

By Priya Ram

Published on:

பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

   

இயக்குனர்கள் கௌதம் வாசுதேவன் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார்.  கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு காக்க காக்க,  பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார். கம்பீரமான குரலுக்கும் வில்லத்தனத்திற்கும் பெயர் பெற்றவர் பாலாஜி. டேனியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக நடிகர் டேனியல் பாலாஜி தனது கண்களை தானம் செய்துள்ளார்.

இந்த நிலையில் புரசைவாக்கத்தில் இருக்கும் நிலத்தில் டேனியல் பாலாஜியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உடனே மருத்துவர்கள் அங்கு சென்று டேனியல் பாலாஜியின் கண்களை தானம் பெற்றனர். இறந்தும் கூட இரண்டு பேருக்கு வாழ்வளித்துள்ளார் டேனியல் பாலாஜி. அவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

a 4
author avatar
Priya Ram