முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதன் காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று காலை 7 மணி அளவில் அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்கு சில மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளின் பேச்சால் தான் முதலமைச்சருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார் .,அதில், “நேற்று கேள்விப்பட்ட ஒரு செய்தியால் மனது சரியில்லை. அது என்னவென்றால் நம்முடைய முதல்வர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதுதான். முதல்வர் கூடிய விரைவில் குணமாகி வீட்டிற்கு வந்து விடுவார். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் இருக்கும்.
அதுபோல அண்ணியின் பிரார்த்தனை நம்முடைய முதலமைச்சரை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு சென்று விடும். முதலமைச்சர் ஒரு நிகழ்வில் பேசும்பொழுது, காலையில் நான் கண்விழித்து எழுந்திருக்கும் பொழுது நம்மவர்கள் யாராவது எதையாவது பண்ணிவிடக் கூடாது என்று எழுந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு மன உளைச்சல் இருக்கு என்று பாருங்க. இதுல கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எல்லாரும் செய்கின்ற செயல்கள்.
நீங்கள் பேசும் வார்த்தைகள் இவையெல்லாம் உங்களை பாதிக்கிறதோ இல்லையோ தலைவரை போய் பாதிக்கும். நம்ம முதலமைச்சர் நாம்தான் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. நான் சொல்கிறது இந்த கட்சிக்கு மட்டும் அல்ல. எல்லா கட்சிக்கும் தான்” என்று கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…