12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற நடிகர் போண்டா மணியின் மகள்… படிப்புச் செலவை ஏற்று உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர்… 

By Begam on வைகாசி 10, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர் நடிகர் போண்டாமணி. வடிவேலு விவேக் மற்றும் முன்னணி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து அதிகம் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலு படங்களில் தான் நடிகர் போண்டா மணி அதிகம் நடித்துள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார்.

   

தனது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வீடியோக்கள் மூலம் திரையுலகத்தினரிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டி ஒன்றில் நடிகர் போண்டாமணி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் விஜய் சேதுபதி, தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் என பலரும் தனக்கு புதிய உதவியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

   

 

மேலும் வடிவேலு மற்றும் அஜித் இருவரும் தனக்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் காமெடி நடிகர் போண்டாமணியின் மகள் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 400 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் .

நடிகர் போண்டாமணியின் குடும்ப சூழ்நிலை அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தற்பொழுது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அவரின் மகள் சாய் குமாரின் கல்லூரி படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் வேல்ஸ் கல்லூரியில் படிக்க விருப்பப்பட்டதால் நடிகர் போண்டாமணியின் மகளுக்கு பிசிஏ படிக்க சீட்டு வாங்கி கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.