தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், ஒரு நடிகர் அரசியலில் நுழைந்து மனது வைத்தால் மாபெரும் வரலாற்றை மீண்டும் எழுத முடியும் என்பதைத் தமிழகத்தில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் தனது தந்தையான என்.டி.ஆரும் ஏற்கனவே நிரூபித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனையைத் தற்போது தவெக தலைவர் விஜய் மீண்டும் நிகழ்த்திக்காட்டியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். “அந்த வெற்றியை மீண்டும் நினைவுகூர்ந்த சகோதரர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய அரசியலில் நடிகர்களின் ஆதிக்கம் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டப்பட்டுள்ளதை பாலகிருஷ்ணாவின் இந்தப் பதிவு உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
